பிரதமர் கிசான் யோஜனா: நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த, (PM KISAN SAMMAN NIDHI) பிரதமர் கிசான் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது அனைவரும் அறிந்ததே. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் தகுதியான விவசாயிகளுக்கு பயிர் இழப்பு அல்லது விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்குகிறது.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய்.6000 வழங்கப்படுகிறது. இதுவரை 13 முறை தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 14வது தவணைக்காக தொகையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். தற்போது இத்திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை அரசு செய்துள்ளது.
இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உங்களது பணம் நிறுத்தி வைக்கவும் வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் தங்களது கிசான் கணக்கின் நிலையை ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் பல மாற்றங்களை ஏற்கனவே நிகழ்த்தியுள்ளது. முன்பெல்லாம் ஒரு மாற்றத்தை செய்ய நீங்கள் ஒரு இ சேவை மையத்தை நோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.
தற்போது பயனர்களே தங்களின் நிலையை சரி பார்த்துக் கொள்ளும் வகையில் பல மாற்றங்களை செய்துள்ளது. PM Kisan இணையதளத்தில் புதியதாக ஒரு விவசாயி பதிவு செய்வது, அவர்கள் பதிவு செய்த நிலையை அறிந்து கொள்வது, அதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்த்தினால் அதனை பார்ப்பது, பயனாளிகளின் நிலை, பயன் பெற்றவர்களின் பட்டியல், பெயர் திருத்தம் போன்றவற்றை எளிதில் மாற்றிக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பயனாளி நிலையில் மாற்றம் ( KNOW YOUR STATUS Changes)
PM Kisan கிசான் போர்ட்டலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையை பார்க்கவும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது விவசாயின் நிலையை அறிய பதிவு எண் மிகவும் முக்கியம். உங்கள் பதிவு எண் தெரியவில்லை என்றால், உங்கள் பதிவு எண்ணை தெரிந்து கொள்ளுங்கள் என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
உங்கள் முன் ஒரு பக்கம் திறக்கும்.
அதில் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை பதிவிடவும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளீடு செய்து உங்களது STATUS என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
PM Kisan விவசாயிகளின் பெயர் திருத்தம்
சில நேரங்களில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, பெயரில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் உங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போகலாம்.
அதனை தற்போது நீங்களே சரி செய்து கொள்ள முடியும்.
இந்த தவறை சரிசெய்ய, நீங்கள் பெயர் திருத்தம் (Name Correction as per aadhaar) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்தவுடன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
பெயர் திருத்தம் செய்ய, நீங்கள் பதிவு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஆதார் அட்டையில் எழுதப்பட்டதைப் போலவே பெயரை நிரப்பவும்.
PM Kisan Mobile App Tamil
தற்போது Mobile App மூலம் காணும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. உண்மையில் இப்போது மொபைல் செயலி மூலம் பிரதமர் கிசான் சம்மன் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக விவசாயிகள் தங்களது மொபைலில் PM Kisan Mobile App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
pm kisan tamil, pm kisan tamil nadu list, pm kisan beneficiary list, pm kisan registration, pm kisan beneficiary status, pm kisan district wise list, pm kisan beneficiary list village wise, pm kisan beneficiary list village wise தமிழ்நாடு, pm kisan samman nidhi district wise list, pm kisan in tamil, pm kisan tamil nadu, pm kisan in tamil nadu, pm-kisan in tamil nadu, pm kisan gov in new registration, pm kisan new farmer registration 2021, pm kisan yojana beneficiary list, pm kisan yojana registration, pm kisan new registration 2021, pm kisan samman nidhi registration, pm kisan beneficiary list 2021