if your Property name is in another ones name – உங்களுக்கு சொந்தமான நிலம் வேறு ஒருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
நிலம் வாங்குவது என்பதே இன்றைய சூழலில் மிகப் பெரிய பாடாக உள்ளது. அப்படி வாங்கிய நிலம் வில்லங்கம் இல்லாமல் இருப்பது மற்றும் பிறரால் அகப்படாமல் காப்பது என்பது இன்றைய சூழலில் சவாலாக இருக்கிறது.
நீங்கள் வாங்கிய நிலத்தை வேறு ஒருவர் பெயரில் மீண்டும் விற்று இருக்கிறார்கள் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? நமது வாசகர் ஒருவர் கூறிய கேள்வி பின்வருமாறு…
” பாண்டிச்சேரி அருகே எங்களுக்குச் சொந்தமான 2 மனைகள் இருக்கின்றன. 2005-ம் ஆண்டு வாங்கினோம். இப்போது அந்த மனைகள் வேறு ஒருவரின் பெயரில் இருப்பது தெரியவந்ததுள்ளது. எங்களுக்கு விற்பனை செய்தவரே மீண்டும் வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இது எப்படிச் சாத்தியம்… அசல் பத்திரம் எங்களிடம்தான் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பது எப்படி?” என்பதுதான் அவரது கேள்வி.
நமது வழக்கறிஞர்ன் பதில்…
2005 -ம் ஆண்டில் இரண்டு மனைகளை ‘A’ என்பவரிடமிருந்து வாங்கி கிரையம் பெற்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பெயரில் பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்களை உங்கள் பெயரில் மாற்றம் செய்து கொண்டீர்களா? அப்படி பட்டா மாறுதல் நீங்கள் செய்யவில்லை என்றாள் சமீபத்தில் வில்லங்கச் சான்று பெற்று பார்த்ததில் அதே “A” என்பவரே அந்த இரண்டு மனைகளையும் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளது உங்களுக்கு தெரிய வந்துள்ளது.
“A” என்பவரிடமிருந்து நீங்கள் முதலில் இரண்டு மனைவிகளை வாங்கிக்கிறேன் பெற்றிருக்கிறீர்கள். அதற்கான கிரைய பத்திரம் உங்களிடம் உள்ளது. அந்த கிராமத்துக்கு பிறகு நீங்களே அந்த இரண்டு மனைகளுக்கு முழு உரிமைதாரர். இந்த கிரகத்துக்கு பிறகு “A” என்பவருக்கு அந்த மனையில் மீது எந்த உரிமையும் இல்லை.
எனவே “A” என்பவர் வேறு ஒருவருக்கு செய்திகளையும் சட்டப்படி செல்லாது. இதுதொடர்பாக நீங்கள் முதலில் “A” என்பவருக்கு எதிராக போலீசில் புகார் செய்ய வேண்டும்.
அதன் பிறகு “A” வேறு ஒருவருக்கு செய்த கிரையம் செல்லாது என்றும், அதனை வில்லங்க பதிவிலிருந்து அந்தக் குறிப்பை நீக்குங்கள். உங்களிடம் உள்ள ஆவணங்களை கொண்டு சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்து தேர்வு பெறுவது அவசியம்.
மேலும் இது போன்ற திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉