Lalitha Pancharatnam Lyrics and Meaning in Tamil
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் – Sri Lalitha Pancharatnam Lyrics in Tamil!
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 1 – Lalitha Pancharatnam Lyrics 1
- ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்!
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம்
விளக்கம்
காலை வேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 2 – Lalitha Pancharatnam Lyrics 2
- ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்!
மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்
புண்ட்ரேஷசாபகுஸுமேஷ§ஸ்ருணீர்ததாநாம்!!
விளக்கம்
காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 3 – Lalitha Pancharatnam Lyrics 3
- ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம்
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்!
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்
பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II
விளக்கம்
பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 4 – Lalitha Pancharatnam Lyrics 4
- ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்!
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II
விளக்கம்
உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 5 – Lalitha Pancharatnam Lyrics 5
- ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II
விளக்கம்
ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 6 – Lalitha Pancharatnam Lyrics 6
- ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர்
வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II
விளக்கம்
ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட – காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
lalita pancharatnam pdf, lalitha pancharatnam lyrics in english, lalitha pancharatnam lyrics in tamil, lalitha pancharatnam benefits, lalitha pancharatnam malayalam pdf, lalitha pancharatnam in telugu, lalitha pancharatnam mp3 free download