Marriage assistance schemes – Social Welfare Department – திருமண உதவி தொகை பெறுவது எப்படி தெரியுமா?
தமிழக அரசால் பெண்களுக்கு பல வகையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டமே ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு வழங்கும் ஒரு நிதி உதவி திட்டம்.
அதாவது ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் யாரெல்லாம் தகுதியுடையவர்கள் எப்படி என்ற திட்டத்தின் கீழ் இணைந்து அதன் மூலம் பயன் பெற முடியும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தமிழக அரசால் இந்த திட்டமானது 5 வகையாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் பின்வருமாறு….
1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் |
2. டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் |
3. ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம் |
4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம் |
5. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் |
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
இந்த திட்டத்தின் நோக்கம்:-
நகர்ப்புறங்களில் மட்டும் கிராமப்புறத்தில் உள்ள ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியாக அரசால் வழங்கப்படும் ஒரு திட்டம். இந்த திட்டமானது பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏழைப் பெண்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குதல் மற்றும் பெண் கல்வி எனும் நிலையை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இரண்டு வகையான திட்டங்கள்:-
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்த திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதேபோல் டிப்ளமோ அல்லது பட்டதாரி பெண்களுக்கு திருமணத்திற்காக ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் 8 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வயது வரம்பு :-
பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் ஆணின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களால் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
தகுதிகள்:-
திட்டம் 1
மணப்பெண் பத்தாம் வகுப்பு தோல்வியோ அல்லது தேர்ச்சி அடைந்திருக்கலாம்.
திட்டம் 2
மத்திய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.
ஆண்டு வருமானம் (Income) :-
72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சான்றிதழ்கள் :-
- பள்ளிமாற்றுச் சான்று – School transfer certificate
- நகல் திருமண அழைப்பிதழ் – Copy wedding invitation
- வருமானச் சான்று – Proof of income
- 10-ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் – Mark list
- பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று – Mark list
- ரேஷன் கார்ட் நகல் ஒன்று – A copy of the ration card
- பாஸ்போர்ட் அளவில் உள்ள ஒரு புகைப்படம் – A passport-sized photo
மேற்கூறிய அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து தங்களது வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமணத்திற்கு 40 நாளுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்..!
இத்திட்டத்தின் நோக்கம்:-
விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தின் கீழ் விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவியை அளித்து, விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் உன்னதமான நோக்கம் ஆகும்.
வழங்கப்படும் உதவி:-
திட்டம் 1
இந்தத் திட்டத்தின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்கம் தாலிக்கு வழங்கப்படும்
திட்டம் 2
இந்தத் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்கம் தாலிக்கு வழங்கப்படும்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தகுதி:-
திட்டம் 1
இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2
மத்திய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.
வயது தகுதி:-
மணமகளின் வயது குறைந்த வைத்தால் 20 ஆக இருக்க வேண்டும் அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:-
திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான சான்றுகள்:-
வருமானத்திற்கான திருமண அழைப்பிதழ், விதவை சான்றிதழ், பட்டம் அல்லது அதற்கு நிகரான சான்றிதழ்கள் தேவை.
மேற்கூறிய அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து தங்களது வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமணத்திற்கு 40 நாளுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இத்திட்டத்தின் நோக்கம்:-
ஏழை விதவையாரின் மகள் திருமணத்திற்கு போதிய நிதிவசதி இல்லாத பட்சத்தில் அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
திட்டம் 1
25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2
50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
தகுதிகள்:-
திட்டம் 1 – இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2 – பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமான வரம்பு இல்லை.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நிபந்தனைகள்:-
ஆண்டு வருமானம் 72,000 மிகாமல் இருக்க வேண்டும்.
விதவை தாயின் ஒரு மகளின் திருமணத்திற்கு மட்டுமே திருமண உதவி தொகை வழங்கப்படும்.
மணமகளின் வயது 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
இந்த திட்டம் பொறுத்தவரை மணமகளின் தாய்க்கு உதவி தொகை வழங்கப்படும். ஒரு வேளை விண்ணப்பித்த தாய் இறந்து விட்டால் மணமகள் பெயரில் உதவி தொகை வழங்கப்படும்.
தேவைப்படும் சான்றிதழ்கள்:-
பள்ளிமாற்றம் சான்று நகல், திருமண அழைப்பிதழ் சான்று, வருமான சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
பட்டப் படிப்பு / பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழ். இவை அனைத்தும் தேவைப்படும்.
மேல் கூறப்பட்டுள்ள திட்டங்களில் பயன்பெற யாரை அணுகுவது?
மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம். தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்
திட்டத்தின் நோக்கம் : ஆதரவற்ற பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவி அளித்தல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1985-1986
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் : 1. ஆதரவற்ற பெண்ணாக இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை
திருமண தேதியன்று மணப்பெண் 18வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தாய் தந்தை இறப்புசான்றிதழ்
சாதிசான்று
திருமண அழைப்பிதழ்
மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்
மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)
குடும்பஅட்டை
மணமகன் மாற்றுசான்றிதழ்
மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்
வங்கி கணக்கு புத்தகம்
மணமகன் மற்றும் மணமகள் ஆதார்கார்டூ
திருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று
நிதியுதவியின் அளவு :
திட்டம்-1
குறைந்தபட்ச கல்வித்தகுதி நிபந்தனையின்றி ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டயப்படிப்பு(DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.சிறப்பு நேர்வுகளில்,தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்
திட்டத்தின் நோக்கம் : பிறப்பு அடிப்படையிலான சாதியின வேறுபாட்டை அகற்றி, கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்துதல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1967
(8.07.2011 முதல் இத்திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :
ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை
திருமணத்தின் போது 18வயது பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினராகவும் மற்றொருவர் வேறு சாதியினராக இருக்க வேண்டும்.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
திருமண பதிவுசான்று
மணமகள் , மணமகன் சாதிசான்று
திருமண அழைப்பிதழ்
மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்
மணமகள் மதிப்பெண் பட்டியல்– பட்டய சான்றிதழ் (Provisional or convocation)
மணமகன்,மணமகள்குடும்ப அட்டை
மணமகன் மாற்றுசான்றிதழ்
மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்
வங்கி கணக்கு புத்தகம்(JointAccount)
மணமகன் மற்றும் மணமகள் ஆதார் கார்டூ
நிதியுதவியின் அளவு
திட்டம்-1
கல்வித்தகுதி இல்லை
ரூ.25,000ம் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
திட்டம்2
பட்டதாரிகள் கல்லூரியிலோ / தொலைதூரகல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைகழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு (DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 (ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணமாகி இரண்டாண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Marriage Assistance Scheme | CLICK HERE>> |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
1 Comment
Sc