Meenakshi Amman 108 – ஸ்ரீ மீனாட்சி அம்மன் 108 போற்றி – மீனாக்ஷி மதுரை Aanmeegam | Aanmeegam News Meenatchi amman மீனாட்சி PDF MP3
ஸ்ரீ மீனாட்சி அம்மன் 108 போற்றி
இந்த அகிலத்தையே ஆளும் மீனாட்சி அம்மன் அருளைப் பெற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த 108 போற்றிகளை சொல்லி வர. ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
1 | ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி |
2 | ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி |
3 | ஓம் அருமறையின் வரம்பே போற்றி |
4 | ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி |
5 | ஓம் அரசிளங் குமரியே போற்றி |
6 | ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி |
7 | ஓம் அமுத நாயகியே போற்றி |
8 | ஓம் அருந்தவ நாயகியே போற்றி |
9 | ஓம் அருள் நிறை அம்மையே போற்றி |
10 | ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி |
11 | ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி |
12 | ஓம் ஆதியின் பாதியே போற்றி |
13 | ஓம் ஆலால சுந்தரியே போற்றி |
14 | ஓம் அநந்த வல்லியே போற்றி |
15 | ஒம் இளவஞ்சிக் கொடியே போற்றி |
16 | ஓம் இமயத் தரசியே போற்றி |
17 | ஓம் இடபத்தோன் துணையே போற்றி |
18 | ஓம் ஈசுவரியே போற்றி |
19 | ஓம் உயிர் ஓவியமே போற்றி |
20 | ஓம் உலகம்மையே போற்றி |
21 | ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி |
22 | ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி |
23 | ஓம் ஏகன் துணையே போற்றி |
24 | ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி |
25 | ஓம் ஐயந் தீர்ப்பாய் போற்றி |
26 | ஓம் ஒப்பில்லா அமுதே போற்றி |
27 | ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி |
28 | ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி |
29 | ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி |
30 | ஓம் கடம்பவன் சுந்தரியே போற்றி |
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
31 | ஓம் கலியாண சுந்தரியே போற்றி |
32 | ஓம் கனகமணிக் குன்றே போற்றி |
33 | ஓம் கற்பின் அரசியே போற்றி |
34 | ஓம் கருணையூற்றே போற்றி |
35 | ஓம் கல்விக்கு வித்தே போற்றி |
36 | ஓம் கனகாம்பிகையே போற்றி |
37 | ஓம் கதிரொளிச் சுடரே போற்றி |
38 | ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி |
39 | ஓம் காட்சிக் கினியோய் போற்றி |
40 | ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி |
41 | ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி |
42 | ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி |
43 | ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி |
44 | ஓம் கூடற்கலாப மயிலே போற்றி |
45 | ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி |
46 | ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி |
47 | ஓம் சக்தி வடிவே போற்றி |
48 | ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி |
49 | ஓம் சிவகாம சுந்தரியே போற்றி |
50 | ஓம் சித்தந் தெளிவிப்பாய் போற்றி |
51 | ஓம் சிவயோக நாயகியே போற்றி |
52 | ஓம் சிவானந்த வல்லியே போற்றி |
53 | ஓம் சிங்கார வல்லியே போற்றி |
54 | ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி |
55 | ஓம் செல்வத்துக் கரசியே போற்றி |
56 | ஓம் சேனைத் தலைவியே போற்றி |
57 | ஓம் சொக்கர் நாயகியே போற்றி |
58 | ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி |
59 | ஓம் ஞானாம்பிகையே போற்றி |
60 | ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி |
நவராத்திரி கொலு – Navaratri Golu
61 | ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி |
62 | ஓம் தண்டமிழ்த தாயே போற்றி |
63 | ஓம் திருவுடை யம்மையே போற்றி |
64 | ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி |
65 | ஓம் திரிபுர சுந்தரியே போற்றி |
66 | ஓம் திருநிலை நாயகியே போற்றி |
67 | ஓம் தீந்தமிழ்ச சுவையே போற்றி |
68 | ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி |
69 | ஓம் தென்னவன் செல்வியே போற்றி |
70 | ஓம் தேன்மொழி யம்மையே போற்றி |
71 | ஓம் தையல் நாயகியே போற்றி |
72 | ஓம் நற்கனியின் சுவையே போற்றி |
73 | ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி |
74 | ஓம் நல்ல நாயகியே போற்றி |
75 | ஓம் நீலாம் பிகையே போற்றி |
76 | ஓம் நீதிகரசியே போற்றி |
77 | ஓம் பக்தர்தம் திலகமே போற்றி |
78 | ஓம் பழமறையின் குருந்தே போற்றி |
79 | ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி |
80 | ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி |
81 | ஓம் பவளவாய்க் கிளியே போற்றி |
82 | ஓம் பல்லுயிரின் தாயே போற்றி |
83 | ஓம் பசுபதி நாயகியே போற்றி |
84 | ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி |
85 | ஓம் பாண்டியரின் தேவியே போற்றி |
86 | ஓம் பார்வதி அம்மையே போற்றி |
87 | ஓம் பிறவிப்பிணியே போற்றி |
88 | ஓம் பெரிய நாயகியே போற்றி |
89 | ஓம் பொன்மயி லம்மையே போற்றி |
90 | ஓம் பொற்கொடி அன்னையே போற்றி |
லட்சுமி தேவி நமது இல்லத்தில் குடியேற!!
91 | ஓம் மலையத்துவசன் மகளே போற்றி |
92 | ஓம் மங்கல நாயகியே போற்றி |
93 | ஓம் மழலைக் கிளியே போற்றி |
94 | ஓம் மனோன்மணித் தாயே போற்றி |
95 | ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி |
96 | ஓம் மாயோன் தங்கையே போற்றி |
97 | ஓம் மாணிக்க வல்லியே போற்றி |
98 | ஓம் மீனவர்க்கோன் மகனே போற்றி |
99 | ஓம் மீனாட்சி யம்மையே போற்றி |
100 | ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி |
101 | ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி |
102 | ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி |
103 | ஓம் வடிவழ கம்மையே போற்றி |
104 | ஓம் வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி |
105 | ஓம் வேத நாயகியே போற்றி |
106 | ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி |
107 | ஓம்அம்மையே அம்பிகையே போற்றி போற்றி |
108 | ஓம்அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]