புகைப்படத்தை வெளியிட்ட புதுமணத் தம்பதி… கேலி செய்த நெட்டிசன்கள் : தம்பதிகள் கொடுத்த தடாலடி பதில்..!

கணவன்_மனைவி உறவு என்பது வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது அல்ல. அது உள்ளங்களால் இணையும் வைபோகம். அப்படி அன்பால் இணைந்த தம்பதிகளின் புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து எடுக்க, தம்பதிகள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

அதேநேரம் இதுகுறித்து சோசியல் மீடியாவில் எழுதியிருக்கும் மணமகன் அர்னேஷ் மித்ரா, ‘புகார் கொடுக்கவேண்டாம். எனக்குக் கிடைத்ததுபோல் அழகான மனைவி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில்தான் இப்படிச் செய்கிறார்கள் எனா சொல்லியுள்ளார்.

அதன்பின்பு பதில் சொல்லியுள்ள மணப்பெண், ‘நான் அவரை காதலிக்க ஆரம்பித்த நாள்முதல் கேலியும், கிண்டலும் வந்துகொண்டுதான் இருக்கிறது. உடலைப்பார்க்கும் சமூகம் மனதைப்பார்க்க மாட்டுகிறது. ’எனக்கூறியுள்ளார்.

மணமகனோ, ‘அனைவருக்கும் நன்றி. எனக்கு இவ்வளவு அழகான மனைவி என்று என்னாலும் நம்பமுடியவில்லை. அவள் சிறுவயதில் இருந்து என் தோழி. இப்போது என் மனைவி..’எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: