வியாழன் என்பது சாயிநாதருக்கு மிகவும் பிடித்தமான நாளாகும். வியாழக்கிழமை அன்று பக்தியுடன் இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாயிக்கு தூப தீபம், பாலகோபம், பிரசாதம் வழங்கி வழிபடுகின்றனர்.
வியாழக் கிழமைகளில் சாயிபாபாவை விசேஷமாகப் பிரார்த்தனை செய்வதைத் தவிர, பூஜைக்குப் பிறகு குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து பிரசாதம் வழங்கி, குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டால் பாபாவின் அருளைப் பெறலாம் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
பாபாவுக்கு குழந்தைகளின் மீது அதிகப் பிரியம் இருந்ததால்… அவர்களுடன் அவர் அதிக நேரம் செலவிடுவார் என்று புராணங்கள் கூறுகின்றன.
அசுத்தங்கள் இல்லாமல் சுத்தமான புன்னகையை சிந்தும் குழந்தைகள் இவ்வுலகிற்கு உத்வேகம் அளிப்பவர்கள் என்றும், அத்தகைய குழந்தைகளுக்கு பாபா பிரசாதம் வழங்குவது நல்ல பலனைத் தரும் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த விசேஷ நாளில் பாபாவின் பெயரில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
வியாழன் அன்று சாய்நாதர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது. அதேபோல பாபாவுக்கு விருப்பமான பால்கோவாவை பிரசாதமாக வழங்குவது நல்லது.
அதேபோல் வியாழன் அன்று பூஜை அறையை சிறப்பாக அலங்கரித்து பாபாவை தூப தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வாழ்வியல் முறையில் வன்முறையை பாபா விரும்பவே இல்லை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து அவரை நினைத்து வழிபட்டாள் நம் தோஷங்கள் நீங்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]