கார் மற்றும் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் மாற்றம்? Third Party Motor Insurance Fy24 Premium Rates Notify |
2023-24 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் நபர் மோட்டார் வாகனக் காப்பீட்டின் பிரீமியம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரீமியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது நிம்மதி தரும் விஷயம். இதனுடன், 3 சக்கர வாகனம், மின்சார வாகனம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் கூடுதல் கிளைம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் IRDA உடன் கலந்தாலோசித்த பிறகு இந்த பிரீமியம் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான அடிப்படை பிரீமியத்தின் விகிதங்களை அமைச்சகம் அவ்வப்போது மாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீமியத்தில் மாற்றம்
கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் பேருந்துகளுக்கு 15 சதவீதமும், விண்டேஜ் கார்கள், தனியார் கார்களுக்கு 50 சதவிகிதமும் குறைந்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு 15 சதவீதமும், ஹைபிரிட் வாகனங்களுக்கு 7.5 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 3 சக்கர பயணிகள் வாகனங்களின் அடிப்படை பிரீமியம் கட்டணங்கள் சுமார் 6.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
30 நாட்களுக்குள் அனைத்து தரப்பினரிடமிருந்தும் இந்த வரைவு பற்றிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் அமைச்சகம் கோரியுள்ளது.
பிரீமியம் எவ்வளவு
தனியார் கார்களில் 1000 சிசிக்கு குறைவான கார்களுக்கு ரூ.2094. 1000-1500 சிசிக்கு ரூ.3416, 1500 சிசிக்கு மேல் ரூ.7897 என பிரிமியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
75 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.538, 75 முதல் 150 சிசி வரை ரூ.714, 150 சிசி முதல் 350 சிசி வரை ரூ.1366 மற்றும் 350 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.2804 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கேரியர் மோட்டார் பொருத்தப்பட்ட டிரைசைக்கிள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பெடல் சைக்கிள் வாகனங்களுக்கு (இ-கார்ட் தவிர) ரூ.4492 பிரீமியம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த பிரிவில் உள்ள தனியார் வாகனங்களுக்கு (இ-கார்ட்கள் தவிர) ரூ.3922 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6 பேருக்கு மேல் பயணிக்கும் கல்வி நிறுவன வாகனங்களுக்கு ரூ.12192 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.14343 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 30 KVற்கு குறைவான வாகனங்களுக்கு ரூ.1780, 30-65 கிலோவாட்டிற்கு ரூ.2904, 65 கிலோவாட்டிற்கு மேல் வாகனங்களுக்கு ரூ.6712 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைப் பற்றி உங்களது கருத்துக்களை பதிவிடவும். நன்றி வணக்கம்!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
two wheeler insurance details in tamil, இரண்டு சக்கர வாகன இன்சூரன்ஸ், bike insurance tamil, வாகன இன்சூரன்ஸ் வகைகள், two wheeler insurance renewal, bike insurance check online by bike number, bike insurance online check, car and bike insurance, காப்பீடு என்றால் என்ன, காப்பீடு நன்மைகள், மோட்டார் வாகன சட்டம் புத்தகம் pdf, மருத்துவ காப்பீடு வகைகள், இன்சூரன்ஸ் வகைகள், bike insurance validity check, how to check bike insurance validity, insurance bike online check, bike insurance status check online, two wheeler insurance check, how to check bike insurance, bike insurance check, insurance check bike