Ajith Kumar AK62 VidaaMuyarchi Movie poster #VidaaMuyarchi #AK62 #may1akday
நடிகர் அஜித்குமாரின் “AK62″ திரைப்படத்தின் தலைப்பு ” விடாமுயற்சி” என்று அவரது 52 வது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை லைக்கா ப்ரொடக்ஷன் தனது அபிஷியல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் தலைப்பு இதுதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முயற்சியில் ஒருபோதும் தோல்வி அடையாது என்று படத்தின் டாக் லைன் அமைந்துள்ளது.
Wishing the man of Persistence, Passion and Hard work 🫡 Our dearest #AjithKumar sir a Happy B'day 🥳
அஜித்குமார் நடித்த கடைசி பத்து படங்களில் ஆறு படங்கள் “வி” எழுத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
பில்லா-2ல் இருந்தே, அஜித் தனது படங்களின் தலைப்புகள் வினைச்சொல்லாக இருக்க வேண்டும், பெயர்ச்சொல்லாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார். அப்படித்தான் ஆரம்பம், வீரம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை என பல தலைப்புகளில் அவரது படங்களுக்கு பெயர் வர ஆரம்பித்தது. கடந்த 10 ஆண்டுகளில் வேதாளம் மட்டும் விதிவிலக்காக இருந்தது.
முன்னணி கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் வைத்திருப்பதை விட, ஒரு தலைப்பாக ரசிகர்களை ஊக்குவிக்கும் ஒரு அதிரடி வார்த்தையை வைத்திருப்பது சிறந்தது நடிகர் அஜித் குமார் அவர்கள் கருதுகின்றார்.
ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டபடி, படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.