Virtual Sim அல்லது eSim
(embedded sim) என்பதே மெய் நிகர் சிம் என அழைக்கப்படுகிறது! Android போன்கள் dual சிம் எனப்படும் இரட்டை சிம்களை தன்னகத்தே அடக்கி இருக்க ஐபோன்
(XS/XR/11) மற்றும் Google Pixel 3, 3A, 3A XL or 4 போன்ற போன்கள் இரண்டாவது சிம் இல்லா குறையை தீர்க்க வந்ததே esim எனப்படும் மெய்நிகர் சிம்.
physical சிம் செய்யும் வேலையை அதி சிறிய வடிவிலோ அல்லது முழுக்க எலக்ட்ரானிக் வகையிலோ இது இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உள்நாட்டு பயன்பாட்டுக்கு மற்றும் வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! ஒரு வன்-சிம் (physical sim)ஐ ஒரு data profile ஆக மாற்றி தேவைகேற்ப பயன் படுத்தும் வசதி கொண்டது மெய்நிகர் சிம். சாதா சிம்மின் அனைத்து வசதிகளும் esimல் உண்டு! iOT எனப்படும் Internet of things -இணையம் சார்ந்த தானியங்கி மின்னணு சாதனங்களுக்கு இணையத்துடன் இணைக்க மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய esim அவசியம். உதாரணம்> உங்கள் கார் மற்றும் வாகனங்களின் பயன்பாடு, பழுது, இணைய மற்றும் பொழுது போக்கு சாதன இணைப்புகளுக்கு esim போதுமானது!
ஒரே நேரத்தில் ஒரு வன்-சிம் மற்றும் ஒரு ஈ-ஸிம் மற்றுமே active நிலையில் வைக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட esimகளை data profile ஆக வைத்துகொண்டு தேவைகேற்ப பயன்படுத்தவும் முடியும். எல்லா நாடுகளுக்கும் நெட்வொர்க்குக்கும் இந்த வசதி வர வில்லை என்பதையும் கருத்தில் கொள்க!
ஜியோ மாற்ற நேரடியாக ஆதார் கார்டுடன் ஜியோ ஸ்டோர் செல்வதே வழி!
அப்புறம் -தல சொல்ல மறந்துட்டேன்! போன் பத்திரம்! esimஐ நினைச்சமாதிரி கழட்டி அடுத்த போனில் போட முடியாது! ஆனா அடிக்கடி போகும் நாடுகளின் சிம்களை esim ஆக மாற்றி வைப்பது உங்கள் தகவல் தொடர்பை எளிதாக்கும்!