What is Post Office National Savings Certificate in Tamil (PONSC)?
அஞ்சலக தேசிய சேமிப்பு சான்றிதழ் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டு காலமாக மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இந்திய தபால் துறை தற்போது மக்களின் பணத்தை பாதுகாப்பாக கையாளும் ஒரு வங்கியாகவும் மாறியுள்ளது. ஆம் இங்கு செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புக்கள் மத்திய அரசின் நேரடி ஆதரவுடன் அதிக வட்டிக்கு உத்தரவாதம் தரக்கூடிய வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் மக்களின் படம் இங்கு பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. திவால் ஆகும் என்ற பயமில்லை.
7.7% சதவிகித வட்டி விகிதத்தை வழங்கும் அருமையான வைப்பு நிதி திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.
மத்திய அரசால் இயக்கப்படும் தபால் நிலையத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் பற்றியும் காண்போம். பொதுவாக இது ஒரு டெபாசிட் திட்டமாகும். இதில் 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபர்ட் செய்வதன் மூலம் அதிகப்படியான வட்டியை பெற முடியும். தற்போது இந்த திட்டத்திற்கு 7.7% வட்டியை அரசு நிர்ணயித்து வழங்கி வருகிறது.
10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம்…
தபால் அலுவலகத்தில் தேசிய சேமிப்பு சான்றிதழில் ஒருவர் ரூபாய் 10 லட்சத்தை முதலீடு செய்வதால் ரூ.4,49,034 வட்டியாக மட்டுமே பெறப்படும். இது தோராயமாக ரூ.4.5 லட்சமாகும். அத்தகைய சூழ்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தத் தொகை ரூ.14,49,034 கிடைக்கும். இங்கு வட்டி விகிதம் 7.7% என கணக்கிடப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழின் சிறப்பு அம்சங்கள்
- தபால் நிலையத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
- தேசிய சேமிப்புச் சான்றிதழில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
- நாட்டின் எந்தவொரு குடிமகனும் தேசிய சேமிப்புச் சான்றிதழில் கணக்கைத் தொடங்கலாம்.
- கூட்டுக் கணக்கு தொடங்கும் வசதியை தபால் துறை வழங்குகிறது.
- மைனரின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
- 10 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் பெயரில் NSC வாங்கலாம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]