Beetroot Benefits of juice in Tamil The medical benefits of beetroot! Uses and Side Effects in Tamil பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் நன்மைகள்
Health Benefits of Beetroot
நமது ஊரில் விலை மலிவாக கிடைக்கும் பொருள்களுக்கு என்றுமே மதிப்பு குறைவுதான். உண்மையை சொல்லப்போனால் அத்தகைய பொருட்களில் தான் இயற்கையான சத்துக்கள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பீட்ரூட்டின் (Beetroot)சிறப்பை நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
பீட்ரூட் என்பது வேர்களில் வளரக்கூடிய ஒரு காயாகும். இந்த பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
Health Benefits of Beetroot
இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது, உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது, இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது, டிமென்ஷியா எனும் மூளை சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது, மேலும் உடல் எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு உடல் எடையை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது.
சமீபத்திய ஆய்வின் முடிவில் புற்றுநோயை தடுக்கும் அளவுக்கு இதில் சத்துக்கள் அடங்கியுள்ளது.
பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
பொட்டாசியம் நிறைந்துள்ள இந்த பீட்ரூட் நரம்பு மற்றும் தசைகளின் செயலாக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. பொதுவாக பொட்டாஷியம் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறைவான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக அமையும். இந்த பீட்ரூட்டில் பொட்டாசியம் என்பது அதிக அளவு உள்ளது. அதனால் இதனை வாரம் இரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.