Munthiri benefits in tamil: இரும்பு, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த முந்திரியை தினமும் உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதன் நன்மையைப் பற்றி இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
Cashew nut benefits in Tamil | முந்திரி uses in Tamil
வைட்டமின்-C மற்றும் உடலை வலுப்படுத்தும் பிற ஊட்டச்சத்துக்கள் முந்திரியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
நீரிழிவு நோய்க்கு…
தினமும் முந்திரி பருப்பை குறிப்பிட்ட அளவு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதனை உட்கொள்ளலாம்.
ரத்த சோகைக்கு…
முந்திரியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்:-
முந்திரியில் உள்ள சத்துக்கள் மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்து ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
எலும்புகளை வலுப்படுத்தும்:-
முந்திரியில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுவதாக கருதப்படுகிறது.
முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடைவது மட்டுமின்றி, எலும்பின் அடர்த்தியும் அதிகரிக்கும்.
தசைகளை வலுப்படுத்த….
தினமும் முந்திரி பருப்பை சரியான முறையிலும், குறைந்த அளவிலும் சாப்பிட்டு வந்தால், தசைகள் வலுவடைந்து, உடல் வலுவடையும்.
செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க
நார்ச்சத்து நிறைந்த முந்திரியை குறைந்த அளவில் தினமும் உட்கொள்வதால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் வாயு பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து காக்கும்
முந்திரி பருப்பை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை சரியாக வைத்திருக்கிறது, இது எடையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனை போக்கவும் உதவுகிறது.
வைட்டமின்-E மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முந்திரியில் ஏராளமாக காணப்படுகின்றன, இது சர்ம பாதுகாப்புக்கு உற்ற நண்பன். சருமத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். சருமத்தை பளபளக்கச் செய்யும்
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்கள்… நன்றி வணக்கம்