Beetroot Benefits of juice in Tamil The medical benefits of beetroot! Uses and Side Effects in Tamil பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் நன்மைகள்
Health Benefits of Beetroot
நமது ஊரில் விலை மலிவாக கிடைக்கும் பொருள்களுக்கு என்றுமே மதிப்பு குறைவுதான். உண்மையை சொல்லப்போனால் அத்தகைய பொருட்களில் தான் இயற்கையான சத்துக்கள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பீட்ரூட்டின் (Beetroot) சிறப்பை நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
பீட்ரூட் என்பது வேர்களில் வளரக்கூடிய ஒரு காயாகும். இந்த பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
Health Benefits of Beetroot
இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது, உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது, இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது, டிமென்ஷியா எனும் மூளை சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது, மேலும் உடல் எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு உடல் எடையை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது.
சமீபத்திய ஆய்வின் முடிவில் புற்றுநோயை தடுக்கும் அளவுக்கு இதில் சத்துக்கள் அடங்கியுள்ளது.
பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
பொட்டாசியம் நிறைந்துள்ள இந்த பீட்ரூட் நரம்பு மற்றும் தசைகளின் செயலாக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. பொதுவாக பொட்டாஷியம் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறைவான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக அமையும். இந்த பீட்ரூட்டில் பொட்டாசியம் என்பது அதிக அளவு உள்ளது. அதனால் இதனை வாரம் இரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.
மேலும் பீட்ரூட்டில் அடங்கியுள்ள தாதுக்கள்:-
- கால்சியம்
- இரும்புச் சத்து
- மக்னீசியம்
- மாங்கனீஸ்
- பாஸ்பரஸ்
- சோடியம்
- ஜிங்க்
- காப்பர்
- செலினியம்
- விட்டமின் சி
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்!
- பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
- பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.
- பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.
- பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.
திருமண உதவி தொகை பெறுவது எப்படி தெரியுமா?
Whatsapp- பில் மறைந்திருக்கும் ரகசியங்கள் – Hidden New Features
- தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.
- பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.
- பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
- பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தாட்கோ கடனுதவி – அரசு வழங்கும் Rs.7,50,000/- பெறுவது எப்படி..! – Tahdco Loan Scheme