LIC-யின் சிறந்த பாலிசி, நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ. 36,000 வரை பெறுவீர்கள் அதை எப்படி என்பது தெரியுமா உங்களுக்கு?
தற்போது உள்ள சூழ்நிலையில் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்கின்ற மிகப்பெரிய குழப்பம் அனைவரின் மனதிலும் நிலவி வருகிறது. முதலீடு என்பது நம் வாழ்நாள் முழுவதும் பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
இன்று LIC-யின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாலிசியைப் பற்றி சொல்லப் போகிறோம். இதன் மூலம் இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் 36,000 ரூபாய் பெறுவீர்கள். LIC-யின் இந்த பாலிசியின் பெயர் LIC ஜீவன் அக்ஷய் பாலிசி (LIC’s Jeevan Akshay). அந்த பாலிசியை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
இந்த அருமையான பாலிசியை LIC மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த பாலிசியின் மூலம் நீங்கள் ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
நீங்கள் சிறியதாக முதலீடு செய்ய விரும்பினால் வருடத்துக்கு 12,000 ரூபாய் வரை ஓய்வு உதயமாக பெற முடியும். நீங்கள் உங்களது முதலீட்டை அதிகமாக்கினால் அதன் மூலம் அதிகமான ஓய்வூதியம் பெற முடியும்.
நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதன் மூலம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வரை ஓய்வூதியமாக பெற முடியும். இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தக்க சிறப்பம்சம் என்னவென்றால் இதுவரை இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடு வரம்பு என்று இதுவரை நிர்ணயிக்கப் படவில்லை.
35 வயது முதல் 65 வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்க முடியும். அது மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பாலிசியின் மூலம் 10 வழிகளில் ஓய்வூதியம் பெறும் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
LIC-யின் இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் 36,000 ரூபாய் ஓய்வூதியம் பெற, ஒரே மாதிரியான விகிதத்தில் வாழ்நாள் முழுவதும் செலுத்தக்கூடிய வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு உதாரணத்துடன் இதைப் புரிந்துகொள்வோம், ஒருவர் 45 வயதில் இந்தத் திட்டத்தை எடுத்து 70 லட்ச ரூபாய்க்கான காப்பீட்டுத் தொகையைத் தேர்வுசெய்தால், அவர் ரூ.71 லட்சத்து 26 ஆயிரம் மொத்தத் தொகையாக செலுத்த வேண்டும். இதில் முதலீடு செய்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.36429 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள். அதே நேரத்தில், பாலிசிதாரர் இறந்தால், ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
மேலும் இந்த பாலிசியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]