Bhagavad gita in Tamil 18 characters PDF Quotes srimad iskacon meaning slokas பகவத் கீதை அத்தியாயம் bahavathkeethai
பகவத் கீதை கூறும் 18 வித குணங்கள்
கீதை பொதுவாக 18 பிரிவுகளைக் கொண்டது. அதில் உள்ள ஒரு ஒரு பிரிவும் மனிதனின் குணநலன்களை விளக்குவது மற்றும் அவனின் வாழ்க்கையை வாழும் வழிமுறைகளை எடுத்துக்கூறும் ஒரு அருமையான காவியம். மகாபாரதத்தில் கண்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே உள்ள ஒரு அற்புதமான புரிதலை கூறும் அற்புதமான ஒரு காவியமே கீதை.
கீதை என்பது ஒருவரது வாழ்வை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கைப் பாட புத்தகம். எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் இந்த காவியம் இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கூறுவதும் இதன் சிறப்பு.
கீதையின் பதினெட்டு குணநலன்கள்
அகந்தை: ‘தான்’ என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறவே முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. இதனால் ஏற்படும் தீமைகளை கீதையின் ஏழாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
எவ்வளவு காலம் வாழ்வீர்கள்? – நெற்றிக் கோடுகள் சொல்லும் ரகசியம்!
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது. மூடி நிற்கும் இருளை விளக்கி மெய் ஞானத்தை அடைய வழி வகை செய்கிறது இந்த அத்யாயம்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது இந்த அத்யாயம்.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். அது எப்படி என்பதை இந்த அத்யாயம் எடுத்துரைக்கிறது.
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது.
லட்சுமி தேவி நமது இல்லத்தில் குடியேற!!
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். இதனை கீதையின் எட்டாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு பற்றி இந்த அத்யாயம் தெளிவாக விளக்குகிறது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது. அப்படி செய்யப்படும் வினையால் ஏற்படும் துன்பம் போன்றவற்றை கீதையின் பத்தாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. அது பற்றிக் கூறுகிறது இந்த அத்யாயம்.
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்…..
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும் எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். அது எப்படி என்பதைத் தான் கீதையின் பன்னிரெண்டாவது அத்யாயம் விளக்குகிறது.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும் என்பதை கீதையின் ஐந்தாவது அதிகாரம் விளக்குகிறது.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். அத்துடன் பக்தியில் ஆழ்ந்து முக்தி பெரும் வழியை இந்த அத்யாயம் எடுத்துக் கூறுகிறது.
108 விநாயகர் போற்றி – 108 Vinayagar Potri
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது இதனை கீதையின் ஒன்பதாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.
திருநீறு பூசிக்கொள்வதால் எத்தனை நன்மைகள் தெரியுமா? ஆச்சரியமூட்டும் தகவல்
வீண் பெருமை: அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை கீதையின் ஆறாவது அதிகாரம் விளக்குகிறது.