இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பணம் ஒரு முக்கியமான தேவையாக இருக்கிறது. பல நேரங்களில் பெரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் இல்லாதபோது கடன்களை நாட வேண்டியுள்ளது. கடனின் உதவியுடன், விரைவில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். பலர் அதனை EMI ஆக செலுத்துகிறார்கள். EMI -ஆக ஒரு கடனை நீங்கள் வாங்கி இருந்தால் அதனை திருப்பி செலுத்தும் போது இந்தனை கவனத்தில் கொள்ளுங்கள்.
EMI (Equated monthly Instalment) மாதத் தவணை
பல வகையான தேவைகளுக்காக கடன் வாங்க நேரிடும். அது தனிநபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள், போன்ற கடனாக இருக்கலாம். EMI மூலம் இதனை மாதம் மாதம் செலுத்த வேண்டி இருக்கும். EMI-ஐ திருப்பிச் செலுத்துவதற்கான தேதியும் நீங்கள் கடன் வாங்கும் போதே நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகளில் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். EMI செலுத்த தவறினால் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பணம் கட்டாததால் அபராதம் விதிக்கப்படும்
EMI சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், கடன் வழங்கும் நிறுவனம் அதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கும். இதன் காரணமாக நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தாமதமான கட்டணம் வசூலிக்கப்படும்
கடன் வாங்கியவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் அல்லது வங்கிக் கணக்கில் இருப்பு EMI தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான தொகைக்குக் குறைவாக இருந்தால் EMI செலுத்துதல் தாமதமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், கடன் வழங்கும் நிறுவனம் கூடுதல் கட்டணம் விதிக்கிறது. கடன் வாங்கியவர் தனது EMI கட்டணத்தைத் தவறவிட்டால், இடையில் அதை ஈடுகட்ட கூடுதல் வட்டி செலுத்த வேண்டும்.
CIBIL மதிப்பெண் பாதிக்கப்படும்
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் EMI செலுத்தவில்லை என்றால் உங்கள் CIBIL மதிப்பெண் குறைந்து விடும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிவப்புக் கொடியில் சென்றால், உங்கள் CIBIL ஸ்கோர் அகல பாதாளத்துக்கு சென்று விடும். இது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. உங்கள் கிரெடிட் ஸ்கோர் மதிப்பீட்டில் குறைவு ஏற்பட்டால், உங்களால் புதியதாக ஒரு கடனை வாங்க முடியாது. அப்படியே அந்த கடன் கிடைத்தாலும் அதிக வட்டியில் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சில யோசனைகள்
- EMI செலுத்த வேண்டிய கடைசி தேதியை உங்கள் மொபைலில் ரிமைண்டர் அமைக்கலாம்.
- அல்லது நீங்கள் தினமும் பார்க்கும் குறித்து வைக்கலாம்.
- மாத தவணை செலுத்துவதற்கான தேதி மற்றும் Bank Balance நினைவூட்டும் பல மொபைல் Appகள் கிடைக்கின்றது. அதனை இன்ஸ்டால் செய்யலாம்
ஆகையால் அடுத்த முறை வங்கி தவணைத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்துங்கள். அதில் மிகவும் கவனமாக இருங்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
magalir kulu loans, லோன் வாங்குவது எப்படி, மகளிர் கடன், magalir loan details, அரசு ஊழியர் தனிநபர் கடன், மகளிர் சுயஉதவிக் குழு பெயர்கள், கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி, பர்சனல் லோன் வாங்குவது எப்படி, கடன் உதவி தேவை, மகளிர் குழு கடன், தனிநபர் கடன் வேண்டும், மகளிர் சுயஉதவிக் குழு தமிழ்நாடு கடன் தள்ளுபடி, லோன் தேவை, magalir kulu loan, best companies for personal loan, best company for personal loan, best personal loans india, magalir kulu loan details in tamil, லோன் வேண்டும், best loan bank in india