தமிழில் மற்ற மொழிகளில் இல்லாத பல அற்புதமான விஷயங்கள் அடங்கியுள்ளது. எண்கள் இன்றி எந்த கணிதமும், அறிவியலும் சாத்தியமில்லை. இன்று நாம் இந்த பதிவில் எண்களைப் பற்றி தமிழில் முழுமையாக காணப் போகிறோம்.
Measurements எனக் கூறப்படும் அளவிடுகள் கணிதத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் எண்ணி கூட பார்க்க முடியாத அளவுக்கு கணிதத்தில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர் என்பதற்கு பின்வரும் அளவீடு முறைகளை கண்டால் ஆச்சரியம் கொள்வீர்கள்.
பகுப்புப் பெயர்கள் தமிழ் அளவீடுகள் | Tamil Engal Measurements in Tamil
பெயர் | எண் அளவு |
முந்திரி | 1/320 |
அரைக்காணி | 1/160 |
அரைக்காணி முந்திரி | 3/320 |
காணி | 1/80 |
கால் வீசம் | 1/64 |
அரைமா | 1/40 |
அரை வீசம் | 1/32 |
முக்காணி | 3/80 |
முக்கால் வீசம் | 3/64 |
ஒருமா | 1/20 |
மாகாணி (வீசம்) | 1/16 |
இருமா | 1/10 |
அரைக்கால் | 1/8 |
மூன்றுமா | 3/20 |
மூன்று வீசம் | 3/16 |
நாலுமா | 1/5 |
கால் | 1/4 |
அரை | 1/2 |
முக்கால் | 3/4 |
ஒன்று | 1 |
எண் ஒலிப்பு
மேலும் இதனைப் பற்றிய முழுமையான விளக்கத்தை பின்வரும் அட்டவணை மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல் மிகவும் பயனுள்ளது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
எண் | அளவு | சொல் |
1/320 | 320 இல் ஒரு பங்கு | முந்திரி |
1/160 | 160 இல் ஒரு பங்கு | அரைக்காணி |
3/320 | 320 இல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
1/80 | 80 இல் ஒரு பங்கு | காணி |
1/64 | 64 இல் ஒரு பங்கு | கால் வீசம் |
1/40 | 40 இல் ஒரு பங்கு | அரைமா |
1/32 | 32 இல் ஒரு பங்கு | அரை வீசம் |
3/80 | 80 இல் மூன்று பங்கு | முக்காணி |
3/64 | 64 இல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
1/16 | 16 இல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
1/10 | 10 இல் ஒரு பங்கு | இருமா |
1/8 | 8 இல் ஒரு பங்கு | அரைக்கால் |
3/20 | 20 இல் மூன்று பங்கு | மூன்றுமா |
3/16 | 16 இல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
1 | ஒன்று | ஒன்று |
முக்கோடி வரை எண்களின் பெயர்கள்
நம்மால் எண்ணி கூட பார்க்க முடியாத எண்களுக்கு எல்லாம் பெயர் சூட்டி கணிதத்தில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்களின் கணித திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
எண் | ஒலிப்புச் சொல் |
1 | ஒன்று (ஏகம்) |
10 | பத்து |
100 | நூறு |
1000 | ஆயிரம்(சகசிரம்) |
10,000 | பத்தாயிரம்(ஆயுதம்) |
1,00,000 | நூறாயிரம்(இலட்சம் – நியுதம்) |
10,00,000 | பத்து நூறாயிரம் |
1,00,00,000 | கோடி |
10,00,00,000 | அற்புதம் |
1,00,00,00,000 | நிகற்புதம் |
10,00,00,00,000 | கும்பம் |
1,00,00,00,00,000 | கணம் |
10,00,00,00,00,000 | கற்பம் |
1,00,00,00,00,00,000 | நிகற்பம் |
10,00,00,00,00,00,000 | பதுமம் |
1,00,00,00,00,00,00,000 | சங்கம் |
10,00,00,00,00,00,00,000 | வெள்ளம்(சமுத்திரம்) |
1,00,00,00,00,00,00,00,000 | அந்நியம் |
10,00,00,00,00,00,00,00,000 | (அர்த்தம்) |
1,00,00,00,00,00,00,00,00,000 | பரார்த்தம் |
10,00,00,00,00,00,00,00,00,000 | பூரியம் |
1,00,00,00,00,00,00,00,00,00,000 | பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி) |
பாதி முறை அல்லது அரைம முறை எண்கள் விளக்கம்
நமக்கு பெரும்பாலும் தெரிந்தது அரை, கால், முக்கால் மட்டுமே. ஆனால் நம் தமிழில் அதற்கும் கீழ் உள்ள அளவீடுகளுக்கு பெயர் சூட்டி உள்ளனர்.
1 – ஒன்று
7/8 – முக்காலலேயரைக்கால் (முக்கால் + அரைக்கால்)
3/4 – முக்கால்
5/8 – அரையேயரைக்கால் (அரை + அரைக்கால்)
1/2 – அரை
3/8 – காலலேயக்கால் (கால் + அரைக்கால்)
1/4 – கால்
1/8 – அரைக்கால்
3/16 – மூன்று வீசம்
1/8 – அரைக்கால்
1/16 – மாகாணி(வீசம்)[7]
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]