வேலிப்பருத்தி துகையல் – Veliparuthi recipe in Tamil uthamani plant benefits in tamil உத்தாமணி இலை பயன்கள் veliparuthi benefits thuvaiyal
வேலிப்பருத்தி துவையல் – Veliparuthi Thuvaiyal
நமது வீட்டு அருகிலேயே எண்ணற்ற மூலிகைகள் மருத்துவ குணங்கள் நிறைந்த இருக்கிறது. ஆனால் அது மூலிகை என்று நாம் தெரியாமல் விட்டுவிடுகிறோம்.
இன்று நாம் பார்க்கப் போவது வேலிப்பருத்தி, உத்தமமாகாணி, உத்தமக் கன்னிகை, அச்சாணி மூலி, உத்தம தாளி, என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சளி, ஆஸ்துமா, பேதி, குடல் புழுக்களை நீக்க, வாதநோய் மற்றும் மூட்டுகள் வீக்கத்திற்கு, ரத்த அழுத்தத்திற்கும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
இந்த வேலிப்பருத்தி பயன்படுத்தி சுவையான மற்றும் ஆரோக்கியமான துவையல் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள் – Ingredients
- வேலிப்பருத்தி இலை – ஒரு கைப்பிடி,
- மிளகாய் வற்றல் – 6
- புளி – எலுமிச்சை அளவு
- எலுமிச்சம்பழம் – பாதி
- உப்பு – தேவையான அளவு,
- பசு நெய் – ஒரு மேஜைக்கரண்டி (அல்லது எண்ணெய்)
செய்முறை – Directions
- வாணலில் நெய் அல்லது எண்ணெய் விட்டு வேலிப்பருத்தி இலையை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் உப்பு, புளி சேர்த்து, எலுமிச்சம் சாறை விட்டு துகையல் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
- வாரம் இருமுறை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம் சேர்த்துக்கொள்ளலாம். மோர் சாதத்துக்குச் சிறந்த தொடுகறி.
- கைகால் வீக்கம், வாயுத்தொல்லை பிரச்னை தீரும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story