மேலே குறிப்பிட்ட தானியங்களில் வேர்கடலை என்றால் மட்டும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து இருக்க வேண்டும்.
மற்ற தானியங்கள் கண்டிப்பாக முதல் நாள் இரவே நன்கு ஊறவைத்து இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
எடுத்துக்கொண்ட தானியங்களை தண்ணீரை வடிகட்டிவிட்டு கொஞ்சமாக தானியங்கள் முழுகும் வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் மூன்று விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவது வழக்கம். அதனால் உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.