மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
உளுந்தை நன்கு நீரில் கழுவி 20 முதல் 25 நிமிடம் மட்டும் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த உளுந்தை தண்ணீர் சேர்க்காமல், வடைக்கு மாவு அரைப்பதை விட சற்று நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் உடைத்த மிளகு மற்றும் சீரகத்தை, உப்பு சேர்த்து பிசையவும்.
கடாயில் எண்ணையை நன்கு காய்ந்த பிறகு, எண்ணை தடவிய வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் மாவை தட்டையாக தட்டி நடுவில் சற்று துளையிட்டு எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.
அரைத்து வைத்துள்ள மாவை அதிக நேரம் வைத்து விட்டால் அதன் நிறம் மாறி விடும் மற்றும் சற்று கசப்பாக இருப்பது போல தோன்றும் அதனால் உடனே மாவை அரைத்தவுடன் வடையை சுட்டு எடுக்கவும்.
இந்த வடை பல நாட்கள் ஆனாலும் கெடாது என்பது இதன் சிறப்பம்சம்
அதில் உள்ள ஓட்டை வழியாக நூலின் உழைத்து மாலையாக்கி அனுமாருக்கு சனிக்கிழமைகளில் சாற்றினால் மிகப்பெரிய நன்மை உண்டாகும்.