Green Peas Masala / Beach Sundal – Pattani masala sundal recipe in Tamil language சுண்டல் நன்மைகள் பட்டாணி மசாலா செய்வது எப்படி Gravy beach channa peanut style kala chana sharmis

Pattani masala sundal recipe in tamil
நமது நாட்டு தானியங்களில் பல நன்மைகள் உண்டு. அதிலும் சொன்ன என சொல்லக்கூடிய கொண்டை கடலையில் பலவிதமான உயர் சத்துக்கள் அடங்கியுள்ளது. நம் குழந்தைகள் விரும்பக்கூடிய சுவையான பட்டாணி மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்க போகிறோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் – Ingredients
மசாலா சுண்டல் செய்வதற்கு வேர்க்கடலை,, ராஜ்மா, சென்னா பட்டாணி அல்லது பச்சை பட்டாணி இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
மசாலா அரைக்க :
- கடலை பருப்பு – 6 ஸ்பூன்
- உளுந்து – 4 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 6 -8
- தனியா – 4 ஸ்பூன்
- எண்ணை -1 ஸ்பூன்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தாளிக்க:
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை – Directions
- நீங்கள் வேர்க்கடலையை எடுத்துக் கொண்டால் இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
- எடுத்துக்கொண்ட தானியங்களை தேவையான அளவு உப்பு போட்டு, தானியங்கள் முழுகும் வரை தண்ணீர் ஊற்றி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு வறுக்கவும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
- மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை போடவும்.
- பிறகு வேக வைத்துள்ள தானியத்தை போட்டு நன்கு கிளறி விடவும்.
- ஏற்கனவே சேர்த்து விட்டதால் இப்போது உப்பு போட வேண்டாம். இப்போது அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை தூவி நன்கு கிளறி விடவும். 5 நிமிடம் வரை வதக்கி இறக்கவும்.
- இப்போது சுவையான மசாலா சுண்டல் தயார்😍😍😍😍😍.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]