Veppam poo thuvaiyal, neem flower recipes வேப்பம் பூ சாலட், Veppam poo salad Sadam ரசம் Cambodian Neem Flower Salad health Medicinal benefits
வேப்பம் பூவை பயன்படுத்தி சுவையான துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – Ingredients
வேப்பம்பூ – 8 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – இரண்டு நெல்லிக்காய் அளவு
பொடித்த வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 8 டேபிள் ஸ்பூன்,
பூண்டுப் பல் – 8 (பொடியாக நறுக்கியது).
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
தயிரின் நன்மைகள் – Curd uses tamil
செய்முறை – Directions
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைச் செர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து, சிறிதளவு எண்ணெயில் வேப்பம் பூவை வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- இனி வறுத்து வைத்திருப்பவைகளுடன் புளி, வெல்லம், தெங்காய்த் துருவல் செர்த்து தெவையான அளவு தண்ணீர் செர்த்து உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- விருப்பப்பட்டால் பூண்டுப் பல்லையும் கடைசியில் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
இப்போது மிகவும் சுவையான வேப்பம்பூ துவையல் தயார். சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். குழந்தைகளின் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
இந்த வேப்பம் பூ துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிவதோடு மீண்டும் பூச்சிகள் வயிற்றில் சேராமல் தடுக்கும் சக்தியும் வேப்பம்பூ துவையலுக்கு உண்டு.
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
திருமண உதவி தொகை பெறுவது எப்படி தெரியுமா?
Employment in NLC 2021 ..! NLC Recruitment 2021 ..!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story