தேவையான பொருட்கள் – Ingredients
வேர்க்கடலை – 1 கப்
சர்க்கரை – ¾ கப்
முந்திரி – 10
நெய் – 1 ஸ்பூன்
தண்ணீர் – ¼ கப்
செய்முறை – Directions
- ஒரு கடாயில் நெய்யை ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் கடலையை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- அதிக நேரம் வறுத்தால் நிறம் மாறிவிடும். அதனால் மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும். கடலை சூடு ஆறியவுடன் தோல் நீக்கவும்.
- கடலை மற்றும் முந்திரியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பின்பு அதை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- பாகு கம்பி பதம் வந்ததும் அதில் கடலையை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
- சுருண்டு வரும்போது ஒரு பட்டர் பேப்பரில் கொட்டி ஆறியதும் டைமண்ட் வடிவில் வில்லைகள் போடவும்.
- இப்போது சுவையான சுவையான வேர்க்கடலை கட்லி ரெடி
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story