Village Business Idea Tamil: இன்றைய காலகட்டத்தில் கிராமத்து இளைஞர்களிடையே வியாபார செய்ய வேண்டுமென்கின்ற எண்ணம் மேல் ஓங்கி உள்ளது. இளைஞர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் மூலம் முன்னேறி தங்கள் குடும்பத்தை உயர்த்த நினைக்கிறார்கள். தொழில் என்றாலே அது பெரு நகரங்களில் மட்டுமே தொடங்க வேண்டும் என்கின்ற எண்ணம் நிலவி இருக்கிறது. நாம் இந்த பதிவில் ஒரு குட் கிராமத்தில் கூட நல்ல லாபம் தரக்கூடிய வியாபாரங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
Business Ideas in Tamil: கிராமப்புற வியாபார யோசனைகள்
கிராமப்புற வணிக யோசனை: இனிமேல் ஒரு தொழிலை தொடங்க நீங்கள் நகரத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை கிராமத்து இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நகரம் போலவே கிராமத்திலும் தொழில் தொடங்க பல வாய்ப்புகள் உள்ளன. இப்போது கிராமத்தில் எந்த தொழிலை தொடங்கலாம், அதை எப்படி வெற்றிகரமாக செய்வது என்பதை பார்ப்போம்.
அதற்கு முன்பு நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கு அந்த கிராமத்தில் வரவேற்பு உள்ளதா, தேவை அதிகமாக இருக்கிறதா? அதிக லாபம் கிடைக்குமா? என்பதை கள ஆய்வு செய்வது மிகவும் முக்கியம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சில தொழில் யோசனைகளை உங்களுக்காக சொல்கிறோம். அதனை செய்து உங்களது தொழிலை தொடங்கி லாபத்தை ஈட்டுங்கள்.
மளிகைக் கடை வியாபார யோசனை ( Grocery Store Business Idea in Tamil)
Maligai kadai business in Tamil: இருப்பதிலேயே மிகவும் எளியதாக தொடங்கக்கூடிய ஒரு தொழில் என்றால் அது மளிகை கடை தான். உண்மையிலேயே அது ஒரு நல்ல தொழில். பெருகிவரும் மக்கள் தொகையில் அனைத்து மக்களின் தேவையை தீர்க்கும் வகையில் கடைகள் இல்லை. பெரும்பாலும் கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்தை தேடிச் சென்றே மளிகை பொருட்களை வாங்கி வருகின்றனர்.
உங்கள் ஊரில் ஏற்கனவே பல மளிகை கடைகள் இருந்தாலும் நகரத்துக்கு இணையான ஒரு மளிகை கடையை உங்கள் கிராமத்தில் அமைத்தால் அது உங்களுக்கு ஒரு நல்ல லாபத்தை தரும்.
காய்கறி மற்றும் பழக்கடை வியாபார யோசனை (Vegetable & Fruit Shop Business Idea in Tamil)
kaikari kadai, Pazhakadai Business idea: இது தவிர, நீங்கள் விரும்பினால், காய்கறி & பழக் கடையைத் திறந்தாலும் நல்ல லாபம் ஈட்டலாம். இந்தத் தொழிலுக்கு எந்த விதமான கல்வியோ, திறமையோ தேவையில்லை. உங்களிடம் இடம் இருக்க வேண்டும் மற்றும் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஈர்ப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக உங்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் Fresh-ஆக இருக்க வேண்டும். இது மிகவும் இலாபகரமான வணிக யோசனையில் ஒன்று
கால்நடை உணவு உற்பத்தி மற்றும் விவசாய பொருட்கள் (Animal food production and agricultural supplies )
கிராமங்களில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஆடு, மாடு, கோழி பரவலாக வளர்க்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை பெரும்பாலும் நகரத்துக்குச் சென்று வாங்கி வந்து உணவிடுவார்கள். அதே போன்று விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்கள், உரங்கள் மற்றும் உபகரணங்களை நகரத்துக்குச் சென்று வாங்கி வருவார்கள்.
இந்த இரண்டையும் நீங்கள் ஒரு தொழிலாக உங்கள் கிராமத்தில் தொடங்கினால் நல்லதொரு லாபத்தை உங்களால் ஈட்ட முடியும்.
மேலும் இது போன்ற பல தொழில் சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]