'காசேதான் கடவுளடா' - வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு.

முதல் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக கலவையான கமெண்ட்ஸ்களையே பெற்றன

பொங்கலுக்கு படம் வெளியாகவிருக்கிறது. விஜய் நடித்த வாரிசு படமும் துணிவு படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மோதல் களைகட்ட தொடங்கியுள்ளது

பொறக்குற நொடியில வெரட்டுது காசு இருக்குற நிம்மதிய பண்ணுது இப்போ குளோசு மணி இன் த பேங்க் அன்ட் பேங்க் இஸ் த பாஸ் சு தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாசு (2)

கனவுல காசு வந்தா கட்டணும் கணக்கு அளவுக்கு மீறி னா ஆசை எதுக்கு சிவிஸ் ல இருக்கு காந்திக்கும் கணக்கு ஏகப்பட்ட இஎம்ஐ ல நாடே கிடக்கு

காசேதான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதுடா (2) தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

மனுசன மிருகமா மாத்திடும் மணி லோன் வேணுமா ப்ரோ டிராப் ஆன் த ஹனி டிஜிட்டல் வேள்டு க்கு மாறுவோம் இனி உசாரா இல்லனா தலையில துணி

காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு அத காலி பண்ண நடக்குது இங்க நல்ல ரேசு ஷார்ப்பா நீ இருந்தா வாங்கிடலாம் குரூசு கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமாவே குளோசு

காசேதான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதுடா (4) தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா